உலக அன்னையர் தினம் கொண்டாடும் அனைத்து அன்னையர்க்கும் என் அன்பான வாழ்த்துகள் !
இதயம்
********
"என்னடீ சொல்ற !??
எங்கம்மாவோட இதயம் வேணுமா ?"
மெய்யுறைந்த நிலையில் கேட்டான் சுதன் .
"ஆமா ! என்னை நீ உயிருக்கு உயிராக காதலிக்கிறது
உண்மையா இருந்தா ;நான் உனக்குக் கடைசிவரை
வேணுன்னு சொன்னா இதை நீ செய்யணும் "
அடியேய் !நாலு வருசமா உன்னோடு உசுராப் பழகியும்
இன்னும் நீ நம்பலையா ? "
"எனக்கு நீயும் வேணும் எங்கம்மாவும் வேணும்
என்னால நீ சொன்னதையெல்லாம் செய்ய முடியாதுடி " .
"அப்படீன்னா ? உங்கம்மாதான் வேணுமில்ல ?
அப்போ அவங்களோடேயே இருந்துக்கோ ."
என்னை விட்டிடு ."
தவித்தான் சுதன் . காதலியா ?அம்மாவா ?
முடிவெடுக்கத் தெரியாமல் உயிரையே கசக்கிப்
பிழிந்து உருக்கிய அவளது காதல் ஒருபுறம் .
உயிரையே தன்மீது வைத்து உலகமே அவன்தான் என வாழும்
அன்னை மறுபுறம் .
உணவை மறந்தான் . உள்ளம் குமுறினான் .
அழுதான் .புரண்டான் .அவள் விடுவதாக இல்லை .
பிடித்த பிடியாய் இருந்தாள் .
இதோ ஒரு முடிவிற்கு வந்தவனாய் ........
அன்றிரவு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த
தாயின் முகத்தில் தலையணையை வைத்து
அழுத்திக் கொன்றான் .
அந்தோ மூச்சடங்கினாள் அம்மா !
உடல் சூடு அடங்குவதற்குள்
நெஞ்சுக் கூட்டை அறுத்து இதயத்தைக்
கையிலெடுத்தான் .
தன்னை மறந்து தன் நிலையை மறந்துத்
தன் காதலியிடம் ஓடுகிறான் .
இதோ ஒரு கல்தடுக்கிக் கீழே விழுகிறான் சுதன் .
கையிலிருந்த இதயம் கீழே!
விழுந்தும் துடிக்கிறதே அந்த அம்மாவின் இதயம் !
"மகனே ! பார்த்துப் போடா .உனக்குக் காயம்
பட்டுடப் போகுது !"என்றொரு குரல் ! சுற்றுமுற்றும்
பார்க்கிறான் .யாருமே இல்லை ! அம்மாவின் குரல் !
அம்மாவின் அதே குரல் ....!
ஓடோடிச் சென்று ;
அப்படியே அந்த இதயத்தை ஏந்திக் கதறி அழுகிறான் .
அம்மா .......! அம்மா ......! எனக்கு இதயம் தந்தவளே !
உன் இதயத்தைக் கொன்னும் நான் விழுந்துருவேனோ
னு துடிக்கிறியே அம்மா !
நான் தப்பு பண்ணிட்டேனே அம்மா .......தப்பு பண்ணிட்டேனே ...!
இல்லை மகனே ! உன்னோட ஆசைதாண்டா இந்த அம்மாவின்
ஆன்ம சாந்தி !
போடா பத்திரமா கொண்டுபோய் உன் காதலிக்கிட்ட கொடு .
உன் நல் வாழ்வுக்கு என் ஆசிகள் மகனே !
மீண்டும் பேசியது அந்த அம்மாவின் பாசம் மாறா
அந்த இதயம் .!

Comments
Post a Comment