Posts

Image
உலக அன்னையர் தினம் கொண்டாடும் அனைத்து அன்னையர்க்கும் என் அன்பான வாழ்த்துகள் ! இதயம் ******** "என்னடீ சொல்ற !??   எங்கம்மாவோட இதயம் வேணுமா ?" மெய்யுறைந்த நிலையில் கேட்டான் சுதன் . "ஆமா ! என்னை நீ உயிருக்கு உயிராக காதலிக்கிறது உண்மையா இருந்தா ;நான் உனக்குக் கடைசிவரை வேணுன்னு சொன்னா இதை நீ செய்யணும் "  அடியேய் !நாலு வருசமா உன்னோடு உசுராப் பழகியும் இன்னும் நீ நம்பலையா ? " "எனக்கு நீயும் வேணும் எங்கம்மாவும் வேணும் என்னால நீ சொன்னதையெல்லாம் செய்ய முடியாதுடி " . "அப்படீன்னா ? உங்கம்மாதான் வேணுமில்ல ? அப்போ அவங்களோடேயே இருந்துக்கோ ." என்னை விட்டிடு ." தவித்தான் சுதன் . காதலியா ?அம்மாவா ? முடிவெடுக்கத் தெரியாமல் உயிரையே கசக்கிப் பிழிந்து  உருக்கிய  அவளது காதல் ஒருபுறம் . உயிரையே தன்மீது வைத்து  உலகமே அவன்தான் என வாழும் அன்னை மறுபுறம் . உணவை மறந்தான் .   உள்ளம் குமுறினான் . அழுதான் .புரண்டான் .அவள் விடுவதாக இல்லை . பிடித்த பிடியாய் இருந்தாள் . இதோ ஒரு முடிவிற்கு வந்தவனாய் ........ அன்றிரவு  நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ...